Monday, July 28, 2008
வாழ்க்கை நிச்சயம் ரசிக்கும், செழிக்கும்!
சோர்வும் துக்கமும் வாழ்க்கையில் வருவதேன்? அடுத்தவர்கள் மீது நாம் ஏன் கோபப்படுக்றோம், பொறாமைப்படுகிறோம்? சிலர் தற்கொலை செய்து கொள்வதேன்? சிலர் குடும்ப வாழ்க்கையை விட்டு ஓடி சன்யாசியாவதேன்? இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் நம்பிக்கை இல்லாமைதான்! தன்னம்பிக்கை இல்லாத மனிதர் எவரும் தம் வாழ்வில் எதையாவது சாதித்ததாக வரலாறு இல்லை! ராபர்ட் ப்ரூஸ் என்பவர் ஏழு முறை போரில் தோற்றார். ஒருநாள் சிலந்தி வலை பின்னுவதை கவனித்தார். சிலந்தி எப்படி பல முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயன்று வென்றது என்பதைப் பார்த்து, தானும் மீண்டும் முயன்று போரில் வென்றார். ஆப்ரஹாம் லிங்கன் பல தேர்தல்களில் தோற்று இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஆனார். தாமஸ் ஆல்வா எடிசன் பலமுறை தோல்வி கண்டபோதும் தளராது உழைத்து மின்விளக்௦௦கைக் கண்டுபிடித்தார். இதையெல்லாம் விடுங்கள்! கடைத்தெருவில் செல்லும்போது பார்த்திருப்பீர்கள், எப்படி கால்கள் இல்லாத, கைகள் இல்லாத, கண்கள் இல்லாத மனிதர்கள் கூட பிச்சை எடுத்தாவது பிழைக்க முயற்சி எடுக்கிறார்கள என்று! இப்படி இருக்கையில், நம்மிடம் படிப்பு, உழைப்பு, தகுதி எல்லாம் இருந்தும் "நம்பிக்கை" என்ற ஒன்று மட்டும் இல்லாததால்தான் வாழ்வதற்கு இருக்கும பல வழிகள் நம கண்ணில் தெரிவதில்லை! மூட நம்பிக்கைகளை ஒழியுங்கள்! தன்னம்பிக்கையோடு பாடுபடுங்கள்! வாழ்க்கை நிச்சயம் ரசிக்கும், செழிக்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment