சிறு தாவணி வயசுல
சிட்டாட்டம் நீ பறந்த
சிறு கிராமம் நான் பாக்க
போன கதை சொல்லட்டுமா?
தெக்கால நாம நட்ட
தென்னையில சீவனில்லை,
பட்டு போன மரத்து கீழ
படுத்து ஒண்ணும் லாபமில்லை.
“பூமத்திய ரேக எங்க?”
வாத்தியச்சி கேள்வி வெக்க
ஒங்கோலந்தான்னு சொல்லி
ஒளிஞ்ச காலமெங்க?
ஆலம் எலை மடிச்சி ஊதி
பேசி புட்ட நெனப்போட
உரக்க கத்தும் ஊமையன் போல்,
ஒந்தெரு கொழாயடியில்கொஞ்ச நேரங் கண்ண மூடி
சொக வாழ்க்கை வாழ்ந்துகிட்டேன்.
அறிஞ்ச மூஞ்சி ஆருமில்லை,
நெழல் ஒதுங்க நாதியில்லை.
பழி சொல்ல சாமியுண்டு
பழய கோயில் போயி நின்னேன்.
நெத்தியில பொட்டு வெச்சு
மீந்த சாந்த கொட்டி வெச்சு
பரிட்சை நம்பர் கிறுக்கி வெச்ச
தூணில் சத்த சாஞ்சிகிட்டேன்.
இட்டிலிய பிச்சி வீச
சண்டையிட்டு திண்ணு போன
கொளத்து மீனுவ
சொகம் கேட்டுகிட்டேன்.
உச்சி வெயில் சுட்டுதுன்னு
துள்ளி துள்ளி நீ ஓட
சூடுபட்ட ப்ரகாரத்தை
சுத்தி சுத்தி நீரூத்த
இப்போ நான் வந்த கத
சொல்லியழ நீ வேணும்.
வந்து சேந்த சேதி சொல்ல
நீ மாத்தி நானும்,
நான் மாத்தி நீயும்,
அடிச்ச மணி தேடி பாத்தேன்.
தெரியுமாடி?
நீ மாத்தி நானும்,
நான் மாத்தி நீயும்,
காதல் சொன்ன கோயில் மணிக்கு
நாக்கறுந்து போன கதை?
காதல் அழிவதில்லை…
Wednesday, July 23, 2008
காதல் அழிவதில்லை…
நீ கண்கள் மூடி
வேண்டிக்கொள்வதால் தான்,
கடவுள் இன்னும்
கடவுளாகவே இருக்கிறார்.
#
அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றைஅணைத்து
விடுகின்றன.
#
சம்மதம் வாங்க போராடுகிறார் பூசாரி.
‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’
என நீ கேட்கிறாயா?
பலியாடாக நான் தயார்.
#
தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.
#
திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?
#
நிதமும்
கனவில் நீ வரும்
இரவுகளுக்காக பிராத்திக்கிறார்
கடவுள்.
#
‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள்.
#
திருவிழாவுக்காக இல்லை,
எல்லோரும்
நீ வார்க்கும் பாலை மட்டும்
பிரித்துக் குடிக்கும்
அன்னப்பாம்பை
பார்க்க வந்தவர்கள்.
#
காதல் அழிவதில்லை…
வேண்டிக்கொள்வதால் தான்,
கடவுள் இன்னும்
கடவுளாகவே இருக்கிறார்.
#
அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றைஅணைத்து
விடுகின்றன.
#
சம்மதம் வாங்க போராடுகிறார் பூசாரி.
‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’
என நீ கேட்கிறாயா?
பலியாடாக நான் தயார்.
#
தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.
#
திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?
#
நிதமும்
கனவில் நீ வரும்
இரவுகளுக்காக பிராத்திக்கிறார்
கடவுள்.
#
‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள்.
#
திருவிழாவுக்காக இல்லை,
எல்லோரும்
நீ வார்க்கும் பாலை மட்டும்
பிரித்துக் குடிக்கும்
அன்னப்பாம்பை
பார்க்க வந்தவர்கள்.
#
காதல் அழிவதில்லை…
கேப்டன் / சூரிய* டி.வி
கேப்டன் :
> (பல்லைக் கடிச்சுகிட்டு சொன்னா எஃபெக்ட் அதிகமா இருக்கும்..) தமிழ்நாட்டுல > 7.89 லட்சம் காதலிகள் இருக்காங்க.. அவங்கள்ள 6.93 லட்சம் பேர் காதலன் சொன்ன > பேச்சை கேக்கறாங்க.. 3.66 லட்சம் பேர் (?) கேக்கறது போல நடிக்கறாங்க.. 2.71 > லட்சம் பேர் காதலன் பேச்சைக் கேக்கறதே இல்ல.. மீதி 1.60 லட்சம் பேர் காதலன் > பேச்சை மீறுவது போல நடிக்கறாங்க.
> இதில் உன் காதலி ஒழுங்கா இருக்கணும்ன்னா தமிழ்நாட்டில் பச்சை எம்.ஜி.ஆர்., > மஞ்சள் எம்.ஜி.ஆர். ரெண்டுபேரும் தோக்கணும். கருப்பு எம்.ஜி.ஆர். ஜெயிக்கணும்.
> ________
> சூரிய* டி.வி. :
> காதல் உலக வரலாற்றிலேயே முதன்முதலாக..
> காதலிக்கத் தொடங்கி 3 நிமிடங்களே ஆன* ..
> முத்தம் பதிய ஒரு இடம்...
> "உன் காதலி ஓடிப் போனால்(ள்)..
> ஓலங்கள் இடாமல் கோலங்கள் பாரு..
> அவளை உரசிப் பார்க்க நினைத்த நீ அரசி பாரு..
> எதுக்கும் அவள் போன இடம் பொறந்த வீடா புகுந்த வீடான்னு பாரு..!
_________________________

சத்தியமா இது எங்க வூட்டு நடப்பு இல்லே!
ரசிப்புத்தன்மை?
==============
(தன் படைப்பு ஓர் இதழில் பிரசுரமானதைக் காணும்போது, ஒரு படைப்பாளனின் உள்ளத் துள்ளல்....அதை அனுபவித்துப் பார்த்தவர் களுக்குத்தான் புரியும்! ஆனால், அவர்களுக்கு "வாய்க்கும்" இல்லாள், நல்லாளாக அமையாமல் போனால் படைப்பாளனின் மனநிலை எப்படியிருக்கும்? இதோ ஒரு எடுத்துக்காட்டு.)
----------------------------------------------------------------------------------
(காட்சி - 1)
(ஒரு படைப்பாளனின் மனைவி அவனது "காதலியாக" இருந்த காலத்தில்....)
"இங்கே பாரு விமலா!..என் கதை ஒண்ணு விகடனில் வந்துருக்கு!"
"வெரிகுட்! (இதழை ஆர்வத்துடன் பிடுங்கி வாசித்துவிட்டு) எப்படி உங்களுக்கு இப்படி யெல்லாம் பிரமாதமா எழுத கற்பனை வருது! (அவன் கைகளைப் பிடித்து குலுக்கி) வாழ்த்துக்கள்!
--------------------------------------------------------------------------------
(காட்சி - 2)
(அவளே அவனுக்கு "மனைவி" யான பிறகு.....)
""இங்கே பாரு விமலா!..என் கதை ஒண்ணு விகடனில் வந்துருக்கு!"
"அதுக்கு என்ன இப்போ? ஹுக்கும், ஏதோ கிறுக்கி அனுப்புறீங்க...போனாப் போவுதுன்னு அவனும் போடறான்........ஆமா.....ம்ம், இதுக்கு எவ்வளவு பணம் அனுப்புவாங்க? ...எப்போ வரும்?...... மணியர்டரா, செக்'கா, டி.டியா? .....ம்ம்ம்ம்..சீக்கிரம் வந்துச்சுன்னா "கேபிள்காரனுக்"காவது குடுக்கலாம்!
(பி.கு: சத்தியமா இது எங்க வூட்டு நடப்பு இல்லே!)

விடை தருகின்றேன் நீ போய் வா!
என் நாடி நரம்புகளை
நாராய் எடுத்து
நீ சிந்தும்
புன்னகைப் பூக்களை
சரமாய் தொடுத்து…
மனம் வாடி வதங்கி
சோரும் போதெல்லாம்
பார்த்து மகிழ்ந்திருந்தேன்!
எப்போவாவது
எங்கோ ஒரு தொலைவிலிருந்து
நீ அன்பாய் பேசும்
நாலு வார்த்தையில்
என் இதயம் நனைத்து
சோகம் தொலைத்து…
நிம்மதிப் பெருமூச்சு விட்டு
என் மனப் பாரங்களையெல்லாம்
இறக்கிக் கொள்வேன்!
ஓ…!
எல்லாமே
இன்றோடு தொலைந்து போகிறது!
ம்…!அன்பின் கிளைகளும்
ஆழமான வேர்களும்
அடியோடு அறுக்கப்பட்டு
இழப்புகளை மட்டுமே
இதயம் தாங்கி…
இடிந்த மனமும்
அழுகையிலேயே தோய்ந்து
தூர்ந்த விழிகளும்…
ஓ…!
இது நான் வாங்கி வந்த வரம்!
இதற்கு நீ என்செய்வாய்…?
விடை தருகின்றேன்
நீ போய் வா!
நாராய் எடுத்து
நீ சிந்தும்
புன்னகைப் பூக்களை
சரமாய் தொடுத்து…
மனம் வாடி வதங்கி
சோரும் போதெல்லாம்
பார்த்து மகிழ்ந்திருந்தேன்!
எப்போவாவது
எங்கோ ஒரு தொலைவிலிருந்து
நீ அன்பாய் பேசும்
நாலு வார்த்தையில்
என் இதயம் நனைத்து
சோகம் தொலைத்து…
நிம்மதிப் பெருமூச்சு விட்டு
என் மனப் பாரங்களையெல்லாம்
இறக்கிக் கொள்வேன்!
ஓ…!
எல்லாமே
இன்றோடு தொலைந்து போகிறது!
ம்…!அன்பின் கிளைகளும்
ஆழமான வேர்களும்
அடியோடு அறுக்கப்பட்டு
இழப்புகளை மட்டுமே
இதயம் தாங்கி…
இடிந்த மனமும்
அழுகையிலேயே தோய்ந்து
தூர்ந்த விழிகளும்…
ஓ…!
இது நான் வாங்கி வந்த வரம்!
இதற்கு நீ என்செய்வாய்…?
விடை தருகின்றேன்
நீ போய் வா!
Tuesday, July 22, 2008
உன் மடி வேண்டும்
சோதனைகள் வாட்டும் போதும்
சோர்ந்து நான் விழும் போதும்
சோகங்கள் தீர்த்து வைக்கும்…
சொற்கமான
உன் மடி வேண்டும் தாயே!
சோர்ந்து நான் விழும் போதும்
சோகங்கள் தீர்த்து வைக்கும்…
சொற்கமான
உன் மடி வேண்டும் தாயே!
கன்னத்தில் அறைந்தது காதல்.
அவளைப் பார்த்து இன்புற்று,
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,
"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.
"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.
அவள் சிரிப்பை ரசித்து.
அவள் பேச்சில் மயங்க இருந்த வேளையில்,
"இதற்குப் பெயர் இனக்கவர்ச்சி", என்று
தலையில் குட்டு வைத்தது முதல் காதல்.
"இதற்குப் பெயர் சலனம்", என்று
கன்னத்தில் அறைந்தது இரண்டாம் காதல்.
Subscribe to:
Posts (Atom)