Wednesday, July 23, 2008

மூளை வளர்ச்சிக்கு அவசியமாகும் !

**************************************************************************
*அயோடின் தைராக்ஸின் எனப்படும் தைராய்டு ஹார்மோன் உண்டாவதற்கான மிக முக்கிய மூலக்கூறு ஆகும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் ஒரு நபரின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியமாகும்

*ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100-150 மில்லிகிராம் அயோடின்
தேவைப்படுகிறது. இந்த அளவு ஒரு நபரின் வயது மற்றும் உடல் செயல் நிலையை பொருத்து வேறுபடும்

*அயோடின் குறைபாடு ஒழுங்கின்மைகள் என்பது இந்தியாவில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்து குறைபாட்டு ஒழுங்கின்மையாகும்

*கர்ப்பிணி பெண்களில் அயோடின் குறைபாடு ஏற்படும்போது இது கற்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது *நமக்கு நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து முக்கியமாக கடல் உணவு மற்றும் தண்ணீரிலிருந்து அயோடின் கிடைக்கிறது

*கோஸ், காலிபிளவர், மரவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளில் காணப்படும் ஒரு வகை பொருள், உடலானது அயோடின் உபேயாகப்படுத்துவதை தடுக்கிறது

*அயோடின் குறைபாட்டு ஒழுங்கின்மைகள் ஏற்படாமல் தடுக்க ஒவ்வொருவரும் ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பினை உணவில் பயன்படுத்த வேண்டும்

*************************************************************************************

1 comment:

மீன்துள்ளியான் said...

கார்த்திக் ,
நீங்க்ள் சொல்வது 100% சரி . "Iodised salt " தயாரிக்கும் நிறுவனங்கள் அயோடினாக்கம் செய்யும்போது அதில் கிடைக்கும் இதர தாதுக்களையும் பிரித்து விடுகின்றன. ஆனால் அந்த தாதுக்களும் நமது உடலுக்குத் தேவை . அவை கிடைக்கததானால் பல வியாதிகள் வருகின்றன.
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்