Wednesday, July 23, 2008

சத்தியமா இது எங்க வூட்டு நடப்பு இல்லே!

ரசிப்புத்தன்மை?
==============

(தன் படைப்பு ஓர் இதழில் பிரசுரமானதைக் காணும்போது, ஒரு படைப்பாளனின் உள்ளத் துள்ளல்....அதை அனுபவித்துப் பார்த்தவர் களுக்குத்தான் புரியும்! ஆனால், அவர்களுக்கு "வாய்க்கும்" இல்லாள், நல்லாளாக அமையாமல் போனால் படைப்பாளனின் மனநிலை எப்படியிருக்கும்? இதோ ஒரு எடுத்துக்காட்டு.)
---------------------------------------------------------------------------­-------
(காட்சி - 1)

(ஒரு படைப்பாளனின் மனைவி அவனது "காதலியாக" இருந்த காலத்தில்....)

"இங்கே பாரு விமலா!..என் கதை ஒண்ணு விகடனில் வந்துருக்கு!"
"வெரிகுட்! (இதழை ஆர்வத்துடன் பிடுங்கி வாசித்துவிட்டு) எப்படி உங்களுக்கு இப்படி யெல்லாம் பிரமாதமா எழுத கற்பனை வருது! (அவன் கைகளைப் பிடித்து குலுக்கி) வாழ்த்துக்கள்!
---------------------------------------------------------------------------­-----
(காட்சி - 2)

(அவளே அவனுக்கு "மனைவி" யான பிறகு.....)

""இங்கே பாரு விமலா!..என் கதை ஒண்ணு விகடனில் வந்துருக்கு!"

"அதுக்கு என்ன இப்போ? ஹுக்கும், ஏதோ கிறுக்கி அனுப்புறீங்க...போனாப் போவுதுன்னு அவனும் போடறான்........ஆமா.....ம்ம், இதுக்கு எவ்வளவு பணம் அனுப்புவாங்க? ...எப்போ வரும்?...... மணியர்டரா, செக்'கா, டி.டியா? .....ம்ம்ம்ம்..சீக்கிரம் வந்துச்சுன்னா "கேபிள்காரனுக்"காவது குடுக்கலாம்!

(பி.கு: சத்தியமா இது எங்க வூட்டு நடப்பு இல்லே!)

No comments: